இரட்டை ரயில் பாதை இன்று திறந்துவைப்பு!

Kumara_welgama

கொழும்புக்கும் புத்தளத்துக்கும் இடையிலான ரயில் சேவைகளில் ஏற்படும் வீண் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில்  கொழும்புக் கோட்டைக்கும் ஜாஎலைக்;கும் இடையில் அமைக்கப்பட்டுவந்த  இரட்டை ரயில் பாதை இன்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த இரட்டைப் பாதையை சீதுவை வரையில் விஸ்தரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜாஎலையில் இருந்து சீதுவை வரைக்கும் உள்ள 6 கிலோ மீற்றர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கவும் துடல்ல மற்றும் அலவதுபிட்டிய ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் தரிப்புக்காக புதிய மேடைகளை அமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (எம்.ரி.-977)