இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று காலை கையளித்தார்.
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளராகவும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பிரதான செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகச் செய்தியாளராகக் கடமையாற்றிய மொஹான் சமரநாயக்க இலங்கை பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தற்காலிக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(எம்.ரி.-977)
