யாழ்ப்பாண வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்தால் குறைவு!

Jaffna_a9

புதிதாக வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 பேரினது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. .2010 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பு யாழ். மாவட்ட  உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.


2008 ஆம் ஆண்டு 7 லட்சத்து 21 ஆயிரத்து 359 ஆக காணப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 05 ஆக  காணப்பட்டது. தற்போதைய மறுசீரமைக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 ஆகக் குறைவடைந்துள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேலை வாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதிக்கான ஒதுக்கீடு போன்ற பல்வேறு மட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். (வ்க்;.உப்.௯77)