அரசு - தமிழ்க்கூட்டமைப்பு பேச்சுவார்த்தை !

h.e._meeting

இன்று  8ஆவது  சுற்று

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான 8வது சுற்றுப் பேச்சு வார்த்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமுல்படுத்தப்பட வேண்டிய முக்கிய விளக்கங்கள் அடங்கிய எழுத்து மூல ஆவணத்தை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போதே அரசாங்கம் தனது எழுத்துமூல ஆவணத்தை கையளிக்குமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கலந்துரையாடப் பட வேண்டிய பல்வேறு தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய பட்டியலொன்றை நாம் அரசாங்கப் பிரதிநிதிகளிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம்.

இதனையடிப்படையாகக் கொண்டும்  இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களைக் கொண்டும் அமுல் படுத்தப்பட வேண்டிய 12 அதிகார ஆவணங்களை அரசாங்கம் இன்று எழுத்து மூலம் எம்மிடம் கையளிக்குமென அவர் குறிப்பிட்டார்.  (எஸ்.டி.எம்.ஐ.10.30)