மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
இதன் காரணமாக உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கத்தினது கௌரவச் சின்னமாகவூம் இது விளங்குகின்றது.
இந்த தலதா மாளிகையின் பொறுப்பை ஏற்கின்றவர் மன்னருக்குரிய அந்தஸ்துக்குரியவராக கருதப்படுவதால் நாட்டை ஆண்ட வேற்று இன மன்னர்களும் இதனைத் தங்கள் பொறுப்பில் வைத்து அதில் சமய வழிபாடுகள் நடாத்;தி அதனைப் பாதுகாத்து வந்தனர்.
புத்த பெருமானின் புனித தந்தம்

கித்சிறிமெவன் மன்னர் காலத்தில ஹேமமாலா இளவரசி மற்றும் தந்த இளவரசர் ஆகியோரால் புத்த பெருமானின் வலது பக்க புனித தந்தம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
அதனையடுத்து அபேகிரி நிகாய பௌத்த மத குருக்களின் அறிவூரைக்கு ஏற்ப மாளிகை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அபேகிரியவில் பல சமய வழிபாடுகளை நடாத்திய பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக (பெரஹர) எடுத்துச் செல்லப்பட்டு கண்டி தலதா மாளிகையில் பாதுகாத்து வைக்கப்பட்டது.
மன்னர்களின் ஆட்சிக் காலத்தின்போது எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகமல் இருக்க பாதுகாப்பு கருதி காலத்துக்குக் காலம் இந்த புனித தந்தம் பல இடங்களுக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கித்சிறிமெவன் மன்னர் காலத்தில் கொண்டுவரப்பட்ட புனித தந்தம் இரண்டாவது பேதிஸ் மன்னர் காலத்தில் இரத்தினக் கற்களினால் ஆன பேழை ஒன்றையில் வைக்கப்பட்டு -தம்ம சக்க- என்ற இல்லத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டது.
முதலாவது ஸ்ரீ தலதா மாளிகை

அதன் பின்னர் மிகுந்து தேரரால் அநுராதபுர நகர மத்தியில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டது. அதுவே இலங்கையின் முதலாவது ஸ்ரீ தலதா மாளிகையாகும்.
இதனைத் தொடர்ந்து பல மன்னர்களின் காலங்களின்போது பொலன்னறுவை- கொத்மலை- பெலிகலை – தம்பதெனிய – யாப்பகுவ – கம்பளை என பல இடங்களுக்கு மாற்றப்பட்டு இறுதியில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நிலையாக வைக்கப்பட்டது.
பெரஹரவின் ஆரம்பம்
இப்புனித தந்தத்தை கண்ணியப்படுத்தும் வகையில் நடாத்தப்படும் எஸல பெரஹர மத அடிப்படையிலும் தேசிய மட்டத்திலும் கலாசார அடிப்படையிலும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இதன் வரலாற்றை நோக்கும்போது நான்காம் நூற்றாணடு;வரை பின் செல்ல நேரிடுகின்றது. கி.பி 309 இல் மேககிரி விகாரையில் -தம்ம சக்க- இல்லம் வரை புனித தந்தத்தை ஊர்வலமாகக் கொண்டு சென்றமையே இலங்கையின் முதலாவது தலதா பெரஹர என அழைக்கப்படுகின்றது.
முதலாவது விமலதர்ம சூரிய மன்னர் காலத்தில் இருந்துதான் இந்த பெரஹர வருடாந்த விழாவாக மாற்றமடைந்தது.

கண்டியின் ஆரம்ப யூகத்தில் சமய வழிபாடாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வூ கீர்தி ஸ்ரீ இராஜசிங்கன் மன்னர்காலத்திலேயே தலதா பெரஹர என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது.
அக்காலத்தில் இரு விழாக்கள் நடைபெற்றன. ஒன்று தலதா பெரஹர. மற்றது நான்கு தேவாலயங்களின் பெரஹரவாகும் இவை இரண்டையூம் ஒருங்கிணைத்து மிகவூம் அலங்காரம் மிக்க பெரஹரவாக மன்னர் மாற்றியமைத்தார்.

இவ்வாறு மிகவூம் அலங்காரமான முறையில் நடத்தப்பட்ட பெரஹர பலதரப்பட்ட கவர்ச்சி மிகு சம்பிரதாயங்களையூம் பெறுமதி மிக்க கலாசார விழுமியங்களையூம் இன்றுவரை விட்டுச்சென்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
இயல் இசை நாடகம் என பல்துறை கலை வளர்ச்சிக்கு இந்த பெரஹர வித்திட்டுள்ளது.
இன்றைய தலதா பெரஹர
தலதா மாளிகையில் நியமிக்கப்பட்டுள்ள சுப நேரங்களைக் கணிப்பிடுபவரின் ஆலோசனையின் படியே தலதா பெரஹரவூக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கப் ( தண்டு) நடுதல்
பெரஹரவின் முதலாவது சமய சடங்காக கப் ( தண்டு) நடுதல் இடம்பெறுகின்றது. பால் வடியூம் பலா அல்லது ருக்; அத்தன மரம் ஒன்றை வெட்டி அதன் தண்டினை நாக்கு துண்டுகளாக்கி நான்கு தேவாலயங்களிலும் நடுவர்.
இதனையடுத்து பெரஹர நிகழ்வூகள் ஆரம்பமாகின்றன. பல கட்டங்களாக நடைபெறும் இந்த பெரஹர நிகழ்வின் முதல் கட்டமாக தேவாலய உள்ள பெரஹர நடைபெறும்.

அதனைத் தொடாந்து கும்பல் பெரஹர ரந்தோலி பெரஹர என பல கட்டங்கள் இடம்பெறுகின்றன.
ரந்தோலி பெரஹரவின் போது இங்கு மகியங்கனை ஆதிவாசிகள்இ வேடர்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்து வழிபடுவதோடு அவர்கள் சேர்த்து வைத்துள்ள ‘தேன்’ பாணியினை குடுவைகளில் எடுத்துவந்து காணிக்கையாக வழங்குவார்கள். அதுபோல இந்துக்கள் கண்டி கட்டுக்கலை பிள்ளையார் கோவிலிலிருந்து மல்லிகைப்பூத் தட்டுகளுடன் சென்று புனித பேழைக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.
இறுதி ரந்தோலி பெரஹர முடிந்தபின் கெட்டம்பே மகாவலிகங்கையில் நீர்வெட்டு வைபவம் இடம்பெற்று- கட்டுக்கலை கோயிலிலிருந்தே பகல் ஊர்வலம் புறப்படும். கெட்டம்பே மாநகர சபை மைதானத்திலும்- போகம்பரை மைதானத்திலும்- ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவில் அமைந்துள்ள வாகன தரிப்பிடங்களின் மேல் மாடிகளிலும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
உள்நாட்டில் இருந்து மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் இந்த பெரஹரவைக் கண்டு களிக்க கண்டி நகரில் ஒன்று கூடுவர். சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையூம் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
நாட்டில் அமைதியான சூழல் நிலவூவதனால் இம்முறை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்டி மா நகரில் இப்போது ஒன்றுதிரண்டுள்ளனர்.
மொழி பெயர்ப்பு:
எம்.ஜே.எம்.தாஜுதீன்
சுஹைர் ஷெரீப்
