இல்ட்சக் கணக்கான பகதர்கள் பங்கேற்பு
வரலாற்று புகழ்மிக்க மடுமாதாக்கோவில் வருடாந்த ஆவணி மாத உற்சவத்தின் மாதா திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இன்று காலை இடம்பெறுகிறது.
சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இன்றுவரை மடுவில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவூம் சமாதான சூழல் காரணமாக வெளி இடங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. (எஸ்.டி.எம்.ஐ.)
