இறுதி நாள் இன்று
பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு சம்மங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் என்பவற்றின் ஆடிவேல் திருவிழாவின் இறுதி நாள் இன்றாகும்.
இன்று அதிகாலை 6.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலிருந்து புறப்படும் ஆடிவேல் ரதம் ஜனாதிபதி மாவத்தை கோட்டை புறக்கோட்டை மெயின் வீதி இரண்டாம் மூன்றாம் நான்காம் குறுக்குத் தெருக்கள் செட்டியார் தெரு பேங்ஷல் வீதி வழியாக கொழும்பு 11 முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடையும்.(எஸ்.டி.எம்.ஐ)
