சனிக்கிழமை கப்பல் விடுவிப்பு
சோமாலியா கடற்பொள்ளைக் காரர்களால் கடத்தப்பட்ட எம். வி. சினின் கப்பல் அடுத்த வாரமளவில் கொழும்பை வந்தடைய உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் கடத்தப்பட்ட எம். வி. சினின் கப்பல் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையையடுத்து சோமாலியர்களால் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத்திட்டத்தின் மனிதாபிமான உதவிப்பொருட்களை ஏற்றிச்சென்ற போது மால்ரா கொடி தாங்கிய இந்தக் கப்பல் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கப்பலில் சிப்பந்திகளாகக் கடமையாற்றிய 9 இந்தியர்கள் உட்பட 21 ஊழியர்களை கடற்கொள்ளைக்காரர்கள் பனயக்கைதிகளாகப் பிடித்திருந்தனர். (எஸ்.டி.எம்.ஐ.)
