நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவின் 65 ஆவது சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண் டாடப்படுவதுடன் நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லியில் செங்கோட்டை பகுதியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகி ன்றன. விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார். எனவே செங்கோட்டை அமைந்துள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தியதால் சுதந்திர தின விழா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்ப்படுகிறது.
விழா நடைபெறும் செங்கோட்டையில் மட்டும் 40 இரகசிய கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியை சுற்றியுள்ள உயரமான கட்டடங்களில் தேசிய பாதுகாப்புப் படையை சேர்ந்த கொமாண்டோ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். இதுபோல அங்குள்ள குடியிருப்பு பகுதிகளும் தீவிரமாக கண் காணிக் கப்படுகின்றன.
டில்லி செங்கோட்டையைத் தவிர பாராளுமன்ற வளாகம் டில்லி சர்வதேச விமான நிலையம் ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
டில்லியின் அனைத்து நுழைவுவாயில்களையும் டில்லி பொலிஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுபோல் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டு ள்ளதாகவும் அங்குள்ள அனைத்து லொட்ஜ்களிலும் தீவிர சோதனை நடத்தும் பொலிஸhர் சந்தேகத்துக்கு இடமானவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .(எஸ்.டி.எம்.ஐ)
