இவ்வருடம் டெங்கு நோயால் 118 பேர் உயிரிழப்பு!

dengue

கொழும்பு  மாவட்டத்திலேயே  கூடுதலான  உயிரிழப்பு

இவ்வருடம் நாட்டில் டெங்கு நோயால் 118 பேர் உயிரிழ ந்துள்ளதுடன்ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 வரை 15 ஆயிரத்து 503 பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்

சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் சுதத் பீரிஸ் இந்தத் தகவல்களை; தெரிவித்தார்.

இவ்வருட ஜுலை மாதத்திலேயே  கூடுதலானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டதாக  அவர் கூறினார்.
மேல் மாகாணம் மற்றம்  மட்டக்களப்பு  புத்தளம்  கேகாலை போன்ற மாவட்டங்களிலேயே  இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தக் காலப் பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 6069 பேர் இந் நோய்க்கு உள்ளானதுடன்  55 பேர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 2329 பேர் இந்நோய்க்கு உள்ளானதுடன் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மட்டு மாவட்டத்தில் 671 பேர் இந் நோய்க்கு உள்ளானதுடன்  9 பேர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் இந்நோய்க்கு 836 பேர் உள்ளானதுடன் 6 பேர் உயிரிழந்தனர். புத்தளம் மாவட்டத்தில் 350 பேர் இந்நோய்க்கு உள்ளாகியதுடன் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த வருடத்தில் ஜுலை மாதத்தில் 4765 பேர் இந் நோய்க்கு உள்ளாகினர். டெங்கு நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. (எஸ்.டி.எம்.ஐ.)

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 11:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது