தூக்குத் தண்டனை இரத்து
இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால்வழங்ப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு அவருக்க மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவிக்கின்றது.
விடுதலை செய்யப்பட்டுள்ள அப்பெண்மணி விரைவில் நாடு திரும்ப உள்ளார்.
அலங்காரப் பூச்சாடி ஒன்றினால் சவூதி அரேபிய பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கம்சுல் கரீம் முஹாரியா எனும் பெண்ணுக்கு 2006 இல் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 5 வருட சிறைத் தண்டனையை அடுத்து இலங்கைப் பணிப்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சினதும் சவூதி அரேபிய தூதகரமும் இவரது விடுதலை தொடர்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. (எஸ்.எம்.ஐ.)
