அமெரிக்க இராணுவ யுத்தக்கல்லூரியின் தலைவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா வாக்களிப்பில் தெரிவாகியுள்ளார்இவ்வாறான பதவிக்காக இலங்கை இராணுவ அதிகாரியொருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
அத்துடன் இதற்காக இவர் 67 நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகளின் வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் அமெரிக்க இராணுவ யுத்தக்கல்லூரியில் கலந்து கொள்வதற்காக 70 இராணுவ அதிகாரிகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புப் படைப் பிரதானியினால் அழைப்புவிடுக்கப்படும்.(எம்.ரி.-977)
