பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானம்
எதிர்வரும் ஐந்து மாத காலத்திற்கு குருணாகல் மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 524 கோடி ரூபாவை ஒதுக்கவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திர்மானித்தள்ளார்.
அமைச்சர் பசில் தலைமையில் குருணாகல் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் இதற்கான தீர்மானத்தை எடுத்தார்.
குருணாகல் மாவட்டத்திலுள்ள 14 தேர்தல் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்திப் பணிகளுக்கென இந்தத் தொகை ஒதுக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் என வேறு வேறாக நிதி ஒதுக்கப்படுகின்றது.
வீதிகள் கார்பட் இட 3799.5மில்லியன் திவிநெகும திட்டத்துக்கு 255 மில்லியன் சமுர்தி திட்டத்துக்கு 155 மில்லியன் கமநெகும திட்டத்துக்கு 960 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வரையறுக்கப்பட்ட வரவூ செலவூத்திட்டத்தின் மூலம் 15 உறுப்பினர்களுக்கும் தலா 75 மில்லியன் வீதம் வழங்கப்படும் என கூறினார்.
இதேவேளை சிறிய நீர்ப்பாசனத் திட்ட திருத்த வெலைகளுக்;கென கமநல சேவைத் திணைக்களம் ஊடாக 38 இலட்சம் ரூபா வழங்கப்படும் எனவூம் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.)
