புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு!

Major_general_Chandana_rajaguru

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிங்க படையணியின் சிரேஷ்ட உறுப்பினராவர்.

இறுதிக் கட்ட போரின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை புனர்வாழ்வு ஆணையகம் மேற்கொண்டு வருகின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலமும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வியைத் தொடர்வதற்கா சுதந்த ரணசிங்க வெளிநாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(எம்.ரி.-977)

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 14:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது