புதுடில்லி நீதிமன்றத்தின் முன்பாக இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் யூ.கே. பன்சால் தெரிவித்துள்ளார்.
அதிபாதுகாப்பு பிரதேசமான நீதிமன்ற வளவுக்குள் பிரீப்கேஸ் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.(எம்.ரி.-977)
