இலங்கை பார்வை இழந்த மக்கள் சம்மேளன பொருளாளர் வேண்டுதல்
கண்பார்வை இழந்தவர்களுக்கு காட்டப்படும் அனுதாபத்துக்குப் பதிலாக சமூக அந்தஸ்தையே அனைவரும் வழங்க வெண்டும் என இலங்கை கண்பார்வை இழந்த மக்கள் சம்மேளனத்தின் பொருளாளர் நிஷாந்த மென்டிஸ் வேண்டுகோள் விடுத்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று (07) காலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு வேண்டிக்கொண்டார்.கண்பார்வை இழந்தவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து
ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அவர் தொடர்ந்து கூறுகையில்.
பார்வை இழந்தவர்களாகிய நாம் இன்று ஏனையவர்களைப் போன்று சகல நடவடிக்கைளையூம் மேற்கொண்டு வருகின்றௌம். எனவே எங்கள் மீது கருணை காட்டுவதற்குப் பதிலாக எங்களுக்கு சமூக அந்தஸ்தையே வழங்க வெண்டும்.
வீட்டிலிருந்தே இந்த அனுதாப நோய் தொற்றிக் கொள்கின்றது. அது தவிர்க்கப்பட வேண்டும். அன்பு தேவைதான். ஆனால் அதற்காக அதனை அனுதாபமாக மாற்றிக்கொள்ளக் கூடாது.
அத்துடன் எங்களுடன் ஒட்டிப்பிறந்த ஒரு சகோதரனாக வருகின்றது வறுமை. அதுவூம் எங்களை சமூகத்திலிருந்து வெறுபடுத்தவே ஏதுவாக இருக்கின்றது.
எமது கல்வி மேம்பாட்டுக்காக சிறந்த முயறசி;கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் பார்வை இழந்தவர்களுக்கென விஷேட பிரிவூகள் அமைக்கப்பட்டிருப்பது மிகவூம் வரவேற்கத்தக்க ஒன்றாகும். எனினும் அதில் கற்பிப்பதற்கு அந்த விடயத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் போதாத நிலையிலேயே இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
தொழில் வழங்கும் நடவடிக்கைகளின் போது பார்வையிழந்தவர்கள் என எம்மை முற்றாக ஒதுக்கி விடாமல் ஒரு குறிப்பிட்ட வீதமளவில் எங்களையூம் இணைத்தக்கொள்ள வேண்டும். இன்று எம் மத்தியில் 300க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றார்கள்.
பார்வை இழந்தவர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு வீதம் தொழில் வழங்குவதற்கென அரசாங்கத்தால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள போதிலும் அது எழுத்தளவிலெயே உள்ளது.
எங்களின் அடையாளச் சிண்ணமான வெள்ளைப் பிரம்பை அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே உள்ளனர். குறிப்பாக சாரதிகள் இது குறித்த விசேட கவனம் செலுத்த வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களக்கு இது பற்றிய விளக்கம் போதியளவில் இல்லை என்றே கூறவேண்டும்.
குறைபாடுகள் உள்ளவர்களாக இருந்த போதும் வாழ்கையில் எதிர் நீச்சல் போடும் எங்கள் பயணத்திற்கு வலுவூ+ட்டும் ஒரு சக்தியாக உங்கள் அனுதாபத்தையன்றி உங்கள் ஒத்துழைப்பையே எதிர்பார்க்கின்றௌம் என நிஷாந்த மென்டிஸ் மேலும் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ)
