புதுடில்லி குண்டு வெடிப்பு !

mahi_manmo

ஜனாதிபதி கண்டனம்

புதுடில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை இலங்கை மக்களுடன் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் ஜனாதிபதி மஹிந்த நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதுடில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் காயமடைந்தவர்கள் தொடர்பாகவும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவூம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(எஸ்.டி.எம்.ஐ)

வியாழக்கிழமை, 08 செப்டம்பர் 2011 10:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது