மீள் குடியேறிவர்களுக்கு புதிதாக 618 வீடுகள்!

basi-_new_selvapu

அமைச்சர் பஷில் ராஜபக்ஷவால் கையளிப்பு
வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 618 வீடுகள் மீள்குடியேறியவர்களுக்கு  நேற்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீட்டுரிமைப்பத்திரங்களைக் கையளிக்கும் வைபவத்தை உத்தியோகபூர்மாக ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி யுதவியுடன் 518 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரத்தில் நோர்வே அர சாங்கத்தின் நிதியுதவியுடன் 100 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் செட்டிக்குளம்  மெனிக்பாம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 100 வீடுகளையும் முல்லைத்தீவு செல்வபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வீட்டுரி மையாளர்களுக்குக் கையளித்தார். (எஸ்.டி.எம்.ஐ)

வியாழக்கிழமை, 08 செப்டம்பர் 2011 11:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது