புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு மாத்தறையில் வரவேற்பு
புனர்வாழ்வு பெற்ற வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு வரவேற்பளிக்கும் விஷேட நிகழ்வொன்று இன்று மாத்தறையில் இடம்பெறுகின்றது.
வவுனியாவிலிருந்து தெற்கிற்கு வருகை தரும் புனர்வாழ்வு பெற்ற இளைஞர் யுவதிகளை வரவேற்கும் விஷேட நிகழ்வில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும சந்திரசிறி கஜதீர ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.வடக்கு தெற்கு உறவுப் பயணம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான இவ்விசேட சந்திப்பில் புனர்வாழ்வு பெற்ற 500 இளைஞர் யுவதிகளுடன் 300 தெற்கு இளைஞர் யுவதிகள் கலந்து கொள்கின்றனர்.
வடக்கு தெற்குக்கிடையில் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் வகையில் வவுனியாவிலிருந்து 500 இளைஞர்கள் இன்று தெற்கிற்கு வருகை தருகின்றனர்.
இவர்கள் களுத்துறை காலி மாத்தறை கதிர்காமம் போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதுடன் நான்கு நாட்கள் தெற்கில் தங்கியிருந்து பல்வேறு கலை கலாசார விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். (எஸ்.டி.எம்.ஐ)
