சட்டவிரோத நாணயமாற்றில் ஈடுபட்ட மூவர் கைது!

Money

8.4 மில்லியன் ரூபா பறிமுதல்

கொழும்பில் திட்டமிட்டு சட்ட விரோத நாணயமாற்றில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 8.4 மில்லியன் ரூபா பணத்தையம் மீட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை மாற்றும் ஒரு நிலையத்தை மோசடி பொலிஸ் பிரிவினர் நேற்று முற்றுகையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சட்டவிரோத பணமாற்று நிலையத்தின் சூத்திரதாரியாக இருந்தவர் பம்பலப்பிட்டி விசாகா வீதியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்தின் உரிமையாளராவார். இந்த பண மோசடியை தமிழில் உண்டியல் பணமாற்று செயற்பாடு என்று பொதுவாக அழைப்பார்கள்.

அமெரிக்கா மேற்கத்திய நாடு கள் இங்கிலாந்து போன்றவற்றில் வாழும் இலங்கையர்  நாட் டில் உள்ள நண்பர்கள் மற்றும் உற வினர்களுக்கு பணத்தை இந்த உண்டியல் முறையிலேயே பொது வாக அனுப்பி வைப்பார்கள்.(எஸ்.டி.எம்.ஐ)

வியாழக்கிழமை, 08 செப்டம்பர் 2011 12:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது