பாடப் புத்தக விநியோகம் நாளை ஆரம்பம்!

bandu

ஹோமாகமையில் ஆரம்ப வைபவம்

பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்துக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நாளை ஹோமாகமையில் ஆரம்பித்து  வைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

2012ஆம் ஆண்டுக்கு மாணவர்களுக்கு வழங்கவென 437 வைகயிலான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவை சுமார் 41 இலட்சம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
இதற்கென 3350 மல்லியன் ரூபா செலவில் 340 இலட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதேவேளை வட மாகாணத்துக்கு 2420 இலட்ச ரூபா செலவில் 25 இலட்சம் பாட நூல்களும் கிழக்கு மாகாணத்தக்கு 3880 மில்லியன் ரூபா செலவில் 40 இலட்சம் புத்தகங்களும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கத் திட்ட்மிட்டுள்ளதால் அதற்கு முன்னர் நாடுமுழுவதற்குமான புத்தக விநியோகத்தை பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.(எஸ்.டி.எம்.ஐ)