தொற்றா நோய்கள் தொடர்பான மாநாடு
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் இன்று நடைபெறும் தொற்றா நோய்கள் தொடர்பான மாநாட்டில் இன்று (20 ம் திகதி) உரையாற்றவுள்ளார்.
இலங்கையில் “தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப் பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ற தொனிப்பொருளில் அமைச்சர் சிறிசேன உரையாற்ற விருக்கின்றார்.தொற்றா நோய்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு நேற்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமானது.
19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இம் மாநாட்டில் ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்குபற்றியுள்ளனர். (எஸ்.டி.எம்.ஐ)
