சதுப்பு நிலங்கள் விழிப்புணர்வுத் திட்டம்!

rits

வினா விடை போட்டி தொடர்

பாடசாலை மாணவர்களிடையே சதுப்பு நிலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினா விடை போட்டி தொடர் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதியன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு மத்திய சூழல் அதிகார சபையின் மூலம் பாடசாலை மட்டத்தில் வினா விடை போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 இலட்ச ரூபா பெறுமதியான இந்தத் திட்டத்துக்கு சிபிஎல் குழுமத்தைச் சேர்ந்த றிட்ஸ்பரி வர்த்தக நிறுவனம்  அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

அரசாங்க பாடசாலைகள் 2800 உள்ளடங்கலாக கல்வி வலயங்கள் மாவட்டங்கள்  பிரதேசங்கள் மற்றும் தேசிய மட்டத்தில் இந்த போட்டி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலுமிருந்து 10ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் கல்வி பயிலும் ஒரு பங்குபற்றுநர் வீதம் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் தேசிய மட்ட போட்டியில் வெற்றிபெறுவோருக்கு எதிர்வரும் பெப்பரவரி மாதம் 02 ஆம் திகதி மத்திய சூழல் அதிகார சபையில் இடம்பெறும் உலக சதுப்பு நில தின நிகழ்வுகளில் போது பரிசில்களும்  சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடாகியுள்ளது. (எஸ்.டி.எம்.i)