ஆறாயிரம் சிகரட்டுகளுடன் இருவர் கைது
சட்ட விரோதமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் கடத்தப்பட்ட ஆறாயிரம் சிகரட்டுகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத சிகரட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவருடன் முச்சக்கர வண்டி ஒன்றையூம் பொலிஸார் கைப்பற்றியுள்ளளனர்.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட்டுகள் மற்றும் முச்சக்கர வண்டியையும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டவை எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (எஸ்.டி.எம்.ஐ)
