மிஸ் யுனிவர்ஸ் பட்டம் அங்கோலா அழகிக்கே!

univers

வணிகப் படிப்பு மாணவி

மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடினார்.

கோடிக்கணக்கான மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போட்டியாக வருடந்தோறும் நடக்கும் இந்த அழகிப் போட்டியில் உலகின் பல பாகங்களில் இருந்து 89 நாட்டின் அழகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பல்வேறு பிரிவுகளில் நடந்த சுற்றுகளில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நீச்சல் உடை  மற்றும் தனிப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி இவற்றில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர்.

திங்கள் இரவு நடந்த இந்த இறுதிப்போட்டியில் பெங்குஏலா நகரத்தில் இருந்து வந்திருந்த வணிகப் படிப்பு மாணவி லீலா லோப்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடினார்.

இவருக்கு மெக்ஸிகோ நாட்டின் கடந்த வருட மிஸ் யுனிவர்ஸான க்ஸினிமா நவரெட்டே மகுடத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.

ஆஸ்திரேலியா  கோஸ்டோ ரிகா  பிரான்ஸ்  யுக்ரெய்ன  போர்சுகல் பனாமா  பிலிப்பைன்ஸ்  அன்கோலா  சீனா  பிரேசில் நாட்டுகளின் அழகிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர்.

இந்தியசார்பாக போட்டியிட்ட  நாட்டின் அழகி வாசுகி சுங்கவல்லி இந்த இறுதிக் கட்டத்துக்கு தேர்வாகவில்லை. (எஸ்.டி.எம்.i)

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 14:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது