அமைச்சர் லகஷ்மன் யாபா தெரிவிப்பு
இலங்கை அசரசின் நடவடிக்கைகள் குறித்து இங்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் பாராட்டுத் தெரிவித்ததாக பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் லகஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிளேக் என்ன கூறுகின்றார் என்று ஊடகவியலாளர் தமது கேள்வியில் கேட்டார்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் இலங்கையை விட்டு சென்றபோது காணப்பட்ட நிலைமையைவிட தற்போது நாட்டின் நிலைமை மிகவும் முன்னேற்ற கரமாக மாறியுள்ளது.
இடம்பெயர்ந்த வர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள் ளனர். இதுபோன்ற பல்வேறு முன்னேற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது வரவேற்கத்தக்கது. இப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்ந்து செல்ல வேண்டும் என பிளேக் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.
மெனிக்பாம் முகாமில் இடம் பெயர்ந்தவர்கள் குறைந்துள்ளதன் மூலம் மீள் குடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றள்ளமை மற்றும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை போன்றவற்றை அமெரிக்கா வரவேற்பதாகவூம் இலங்கையின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா மேலும் உதவூம் வகையில் 20 மில்லியன் டொலரை வழங்கவூம் பிளேக் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் Nமுலும் குறிப்பிட்டார். (எஸ்.டி.எம்.ஐ)
