அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் 7.5 மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் ரயில்வே கட்டுப்பாட்டறையாளர்கள் சமிஞ்சைகளை சரிவர வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்த்த அமைச்சர் குமார வெல்கம சம்பவம் தொடர்பில் தனிபட்ட ஒருவரது தவறு காரணமாக இருக்குமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
