30 நிமிட வேலை நேர சலுகை!

colo-katu-train

மாத்தறையிலிருந்து கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு மட்டும்

ரயில் பாதை திருத்த வேலை காரணமாக மாத்தறையிலிருந்து ரயில் மூலம் கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் 30 நிமிட சலுகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி   காலையில் 15 நிமிட தாமதித்து கடமைக்கு வருவதற்கும் 15 நிமிடத்துக்கு முன்னர் வீடு திரும்புவதற்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இந்த சலுகை நடைமுறைக்கு வந்துள்ளதுடன் மாத்தறை- கொழும்புக்கு இடையிலான ரயில் பயண பருவச் சீட்டுக்களை வைத்துள்ளோருக்கே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

காலி- இந்துருவ ரயில் பாதை திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை அரச ஊழியர்களுக்கான மேற்படி நேரச் சலுகை வழங்கப்படவுள்ள தெனவும் அமைச்சு மேலும் தெரிவித்தது. (எஸ்.டி.எம்.ஐ)

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 15:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது