சரித்திர பிரசித்தி வாய்ந்த கண்டி எஸல பெரஹர நிகழ்வூகளில் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பரிசுகள் வழங்கப்படவூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரஹர இறுதி நாளான இன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்த பரிசு வழங்கப்படவூள்ளது.
பெரஹர ஊர்வலத்தில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தும் 05 கலைஞர்களுக்கு வாழ்வில் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் பரிசை ஜனாதிபதி வழங்குவார்.
மேலும் 50 விசேட கலைஞர்களுக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் 50 கலைஞர்களுக்கும் வயது முதிர்ந்த 10 கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (எம்.ரி.-977)
