ஜனாதிபதி நம்பிக்கை
கண்டி பெரஹர தொடர்பான பழைய சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையையும் இலங்கை மக்கள் எதிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்வர் என தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி பெரஹர சிறப்பாக முடிந்த செய்தியை ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தியவதன நிலமே நிலங்கா தெல- நான்கு தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேகளுடன் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து கண்டி பெரஹர சிறப்பாக முடிந்த செய்தியை அறிவிக்கும் -சன்னஸ- ஓலையைக் கையளித்தனர்
.அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சமயச்சடங்ககளில் கலந்துகொண்டார்.
கண்டி எஸல பெரஹர சிறப்பாக நiபெற சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்கர்களுக்கும் பெரஹரவுக்கு அயராது உழைத்த சகலருக்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.
பெரஹரவில் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு ஜனாதிபதி பரிசளித்து பாராட்டும் தெரிவித்தார்.
இது தொடர்பான நிகழ்வுகளில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ –ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)


