பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் காலியில் அமைக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான 32 இல்லங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உரியவர்களிடம் கையளித்தார்.
நாடு முழுவதிலும் ஆறு மாவட்;டங்களில் இவ்வாறான 700 வீடுகள் இராணுவ வீரர்களுக்காக அமைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கில் அகங்கம- ஹிக்கடுவ- எல்பிட்டிய- காலி- அஹுங்கல்ல-அக்மீமன- ரத்கம- தெல்வத்தை- புஹுல்துவ – பலப்பிட்டிய- லேல்வல-ஹபராதுவை மற்றும் கரந்தெனிய ஆகிய பிரதேசங்களில் இந்த 32 வீடுகளும் 30 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை இராணுவ வீரர்களிடம் கையளிக்கும் அடையாள நிகழ்வூ நேற்று காலியில் உள்ள அக்மீமன கப்புஹேன்பல நந்திமித்;ர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. வீடுகளுக்கான சாவியை ஜனாதிபதி உரியவர்களிடம் கையளி;த்தார்.(எம்.ரி.-977)


