நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

deplomats-1புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான ஒரு உயர்ஸ்தானிகரும் 5 தூதுவர்களும் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இன்று கையளித்துள்ளனர்.

ட்ரினிடேட் மற்றும் டுபேகோவிற்கான புதிய உயர்ஸ்தானிகரும் டென்மார்க்- ஆப்கானிஸ்தான்- உக்ரேன்- டொமினிக் குடியரசு மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். (எம்.ரி.-977)

deplomats-2