அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல எழுதிய -சன்னிவேதன பிரவனதா- என்ற சிங்கள மொழியிலான நூலை அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் வைத்து நேற்று கையளித்தார்.
களணிப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவுள்ள பேராசிரியர் ஆரியரத்ன அதுகல- மிகவும் அரிய தகவல்களைத் தொகுத்து எழுதியுள்ள இந்த நூல் தகவல் மற்றும் ஊடகத்துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டின் எதிர்கால சவால்களை நேர காலத்துடன் இனங்கண்டு அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஊடகத்துறையைக் கட்டியெழுப்பும் நோக்கில் அவர் இந்த நூலை எழுதியுள்ளார்.
ஒரு நாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுவது அந்த நாட்டின் ஊடக கலாசாரம் என்பது அவரது கண்ணோட்டமாகும். இந்த நூலை பாஸ்ட் பப்ளிகேஷன் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.(எம்.ரி.-977)



