ஜனாதிபதி இன்று காலை நாடு திரும்பினார்!

HE_returned

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையினால் இலங்கைக்கான சர்வதேச ஆதரவு அதிகரிததுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா நிபுணர் குழு தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே தவிர எதுவித விசாரணைகளையும் மேற்கொள்ளாது என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன்- இலங்கைகு வழங்கிய உறுதி மொழியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்  பான் கீ மூனைச் சந்தித்து உரையாடியபோது நினைவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. (எம்.ரி.-977)