சிறுவர் தின செய்தியில் ஜனாதிபதி
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியவர் தினமாகும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீடுத்துள்ள செய்தியில் சிறுவர் பருவத்தை அர்தமாக்கி கொள்ளுமாறு அனைத்து சிறுவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்!இதனிடையே எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்- சிறுவர் உலகத்தின் இனிமையான தருணங்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமை என குறிப்பிட்டுள்ளார்.
உலக சிறுவர் தினம் தொடர்பான தேசிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
"யாருடைய சிறுவர்கள் இவர்கள் - உங்களது எமது சிறுவர்கள் - தாய் நாட்டை போன்று பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் சிறுவர் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.(எம்.ரி.-977)
