ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நியூயோர்க் பயணமானார்.
ஐ.நா. சபையின் 66 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே நியூயோர்க் சென்றடைந்துள்ளார்.இந்த நிலையில் நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் செப்டெம்பர் 23ஆம் திகதி ஐ.நா சபையில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (எம்.ரி.-977)
