ஐ.நா. பொதுச்சபையின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நிவ்யோர்க் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் சிறுமிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
193 நாடுகள் பங்குபற்றும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடர் இம்மாதம் 13 ஆம் திகதி நிவ்யோர்க்கிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது.
அனுபவமிக்க கட்டார் நாட்டு ராஜதந்திரியான நஸீர் அப்துல் அசீஸ் அல் நாசா பொதுச்சபையின் அடுத்த தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் மத்தியஸ்தத்தின் பங்கு- அனர்த்தங்களைத் தவிர்த்தல்- நிலையான அபிவிருத்தி- உலகளாவிய சுபீட்சம்- பலஸ்தீன நிலைமை- மனிதாபிமான உதவி- பால் சமத்துவம் என்பன இவ்வருட பொதுச்சபைக்கூட்டத்தொடரில் கலந்துரையாடப்படவுள்ள மிக முக்கியமான அம்சங்களாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (எம்.ரி.-977)


