யாழ். குடாநாட்டில் வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் இன்று ஆரம்பமாகவுள்ளது. 29ஆம் திகதி வரை 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.
எதிர்வரும் 27 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 29 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதனைவிட 13 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும்- 21 ஆம் திகதி கார்த்திகைத் திருவிழாவும்- 23 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும்- 24 ஆம் திகதி வேல் விமானத் திருவிழா மற்றும் கஜவல்லி- மஹாவல்லி உற்சவமும் நடைபெறவுள்ளன. இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழா நடைபெறவுள்ளது.
நல்லூர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என ஆலய பரிபாலசபை எதிர்பார்த்துள்ளது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகள் யாவற்றையும் ஆலய பரிபாலசபை மேற்கொண்டிருக்கும் அதேவேளை- ஆலயத்தின் வெளிச்சூழலில் மேற்கொண்ட அனைத்து வேலைகளையும் தாம் மேற்கொண்டிருப்பதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் மு. செ. சரவணபவ தெரிவித்தார்.(எம்.ரி.-977)
