உள்ளூர் பணியாளர்கள் நால்வர் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து சேவை
வவூனியாவில் கடமையாற்றி வரும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு அதன் கடமையை பூர்த்தி செய்துகொள்ள உள்ளது.
அதன்படி வவுனியாவில் கடந்த 13 வருட காலம் மனிதாபிமான சேவையாற்றிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு இம்மாத இறுதியுடன் வவுனியா அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறவுள்ளது.
வவுனியாவிலிருந்து வெளியேறிய போதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு வின் உள்ளூர் பணியாளர்கள் நால்வர் சில கடமை களுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்துடன் இணைந்து பணிகளை மேற்கொள்வர். (எஸ்.டி.எம்.ஐ.14.45)
